இரண்டு திட்டங்களின் கீழ் கடன் வழங்க பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பல்வேறு திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் ‘இ-காம்’, ‘இன்ஸ்டா இஎம்ஐ கார்டு ஆகிய இரு திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்களின் தற்போதைய விதிகளை நிறுவனம் கடைப்பிடிக்காதது, குறிப்பாக இந்த இரண்டு கடன் திட்டங்களின் கீழ், கடன் வாங்குபவர்களுக்கு உண்மையான விவரங்களை தெரிவிக்காததால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை தடை தொடரும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.