இராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை!
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேர் விடுதலை!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட் நிலையில், 21 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் செல்வதும், அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்வதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்த வகையில் கடந்த மாதம் 14 மற்றும் 28-ஆம் தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 64 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை 10 படகுகளையும் பறிமுதல் செய்தது.

தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இதை அடுத்து முதல் கட்டமாக கடந்த 8-ஆம் தேதி 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அடுத்ததாக கடந்த 9-ஆம் தேதி 38 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த இலங்கை மன்னார் நீதிமன்றம், இந்த தண்டனையை 5 வருடம் சென்ற பிறகு அனுபவிக்க வேண்டும் என்ற விநோத நிபந்தனையுடன் விடுதலை செய்தது.

இந்த நிலையில், சிறையில் உள்ள மீனவர்களின் சிறைக்காவல் தேதி முடிந்து, இன்று இலங்கை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். இதனை அடுத்து, 22 பேரில் 21 மீனவர்களை இலங்கை யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

மீதமுள்ள ஒருவரான முருகன் என்பவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. அதன் பின்னரும் எல்லை தாண்டினால் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மீதமுள்ள ஒரு மீனவர் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 24 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில தினங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: srilankafishermen
ShareTweetSendShare
Previous Post

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி – உண்மை நிலவரம் என்ன?

Next Post

திரையுலகில் புதிய சாதனை – 60 ஆண்டுகளைக் கடந்த கே.ஆர்.விஜயா!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies