மத்திய அரசின் ஊட்டசத்து திட்டத்தை விஷத்திட்டமாக மாற்ற முற்பட்ட அமைச்சர் கீதா ஜீவனுக்கு கடுமையான தண்டணை வழங்கப்படவேண்டும் எனப் பாஜக பிரச்சார பிரிவு மாநிலத் தலைவர் குமரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குப்பையில் போடவேண்டிய அழுகிய முட்டைகளை வியாபாரிகளிடம் இலவசமாக வாங்கி, பள்ளிகளுக்கு தலா 4, 5 என அனுப்பினால் அதை பள்ளி ஆசிரியர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது! காரணம் 200, 300, 500 முட்டைகளில் 5, 6 என்பது பெரிய விசயமல்ல!
தூக்கி வீசிவிடுவார்கள்! காசுகள்மட்டும் கோடிகளின் கணக்கில் சேர்ந்துவிடும்!
காரணம் அவர்களே பள்ளிக்கு வராத 10, 20, 30 மாணவர்களுக்கும் சேர்த்துதான் கணக்கு எழுதி சம்பாதிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது!
இந்த கணக்கு அரிசி பருப்பு இதர இதர என தொடரும்!
ஆசிரியர் என்றாலே திமுக என்றுதான் சொல்வார்கள்! சத்துணவு ஊழலுக்கு இந்த அரசியலும் காரணம்! இப்போது காலம் மாறிவருவது வேறு விசயம்!
சரி விசயத்திற்கு வருவோம்,
அழுகிய முட்டைகள் தலா 5 என பள்ளிக்கு வந்து குப்பையில் வீசப்பட்டால், மாதம் 10 கோடி மிச்சம்!
ஒரு முட்டையில் ஒரு ரூபாய் அதிகம் விலை வைத்து வாங்கப்பட்டதாக கணக்கு எழுதி, உண்மையில் ஒரு ரூபாய் குறைவாக கொடுக்கப்பட்டால் மாதம் 15 கோடி மிச்சம்!
ஆகமொத்தம் மாதம் 25 கோடி!
இது வெறும் முட்டையில்தான்!
அதாவது உதயநிதி கையில் தூக்கித்திரிந்தாரே அதே முட்டையில்!
சத்துணவில் வழங்கப்படும் அரிசி பருப்பு என்றெல்லாம் பார்க்கப்போனால், இன்னும் பல கோடிகள் இருக்குமே!
பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கீதாஜீவன் சொல்கிறார், முட்டையில் மை தடவினால் அந்த மை; முட்டை ஓட்டை துழைத்துக்கொண்டு ”உள்ளே போகுமாம்!” எப்படி?
தமிழக அரசு என முட்டையில் கறுப்பு மையில் சீல் போட்டார்களாம்! அதில் கருணாநிதி படமும் ஸ்டாலின் படமும் உதயநிதி படமும் போட்டார்களா இல்லையா என்னும் விவரம் நம்மிடம் இல்லை! (பால் கவரில் இத்தகைய படங்கள் போடப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்)
சரி, கீதா ஜீவன் சொல்வதை பாருங்கள்!
லாரியில் தார்ப்பாய் போடவில்லையாம்!
மழை பெய்ததாம், மழையில் முட்டை நனைந்ததில் போட்ட முத்திரை கரைந்து வடிந்துவிடவில்லையாம், கரைந்து முட்டையின் உள்ளே புகுந்து முட்டை கருவை கறுப்பாக்கி விட்டதாம்!
அழுகிய முட்டை என்பதால் முட்டை கறுப்பாக இல்லையாம்! இதுதான் காரணமாம்!
தமிழக அரசின் ஆராய்ச்சி கூடத்தில் ஆராயப்பட்டு இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டதாம்!
அமைச்சரே ஒரு பேட்டியில் இந்த விஞ்ஞானத்தை வெளியிட்டு பேசுகிறார்!
இவர் சொல்வதுபோல் நடக்க வாய்ப்பில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்!
ஒரு வேளை அமைச்சர் சொல்வது உண்மைதான் என்றால், முட்டையில் தீட்டப்படும் வண்ணங்களில் கோழிக் குஞ்சுகள் பொரிக்குமே!
கோழிக்குஞ்சு விற்பனையாளர்கள், குஞ்சுகளின் இறக்கையில் எதற்கு வண்ணம் பூசவேண்டும், முட்டையிலேயே வண்ணம் பூசி விடலாமே!
இப்படி ஒரு வேடிக்கையான விளக்கத்தை அமைச்சர் கொடுக்க என்ன காரணம்?
அப்பன் குதிருக்குள் இல்லை என்று கீதா ஜீவன் ஏன் சொல்ல வேண்டும்?
அது அழுகிய முட்டையல்ல என விளக்கம் தரும் வகையில் எதற்காக அறிவியலுக்கு ஒவ்வாத நகைப்புக்குரிய கதையை கீதா ஜீவன் கட்டவிழ்த்து விட்டார்?
நடந்தது என்ன?
வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் ஆய்வு செய்யும் அளவுக்கு இவரிடமும் மர்மம் இருக்கிறதா?
உண்மையிலேயே அழுகிய முட்டைகள் சத்துணவில் சேர்க்கப்படுகிறதா?
அப்படி சேர்க்கப்படும் முட்டைகள் சத்துணவு ஆசிரியர் மற்றும் சமையல் செய்யும் உதவியாளர்களால் கண்டறியப்படாமல், குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டால், என்னவாகும்?
இது, உணவில் விஷத்தை கலப்பதற்கு ஒப்பானதல்லவா?
சம்மந்தப்பட்ட அமைச்சர் பெண்ணாக வேறு இருக்கிறார்!
ஒரு பெண் அமைச்சர் இப்படி ஒரு பாதக செயலில் ஈடுபடலாமா?
இவர் பேட்டியில் குறிப்பிட்ட அந்த ஆராட்சி நிறுவனம் எது?
அது ஒரு டுபாகூர் நிறுவனமா?
தமிழக அரசின் நிறுவனம் என்று சொல்கிறாரே!
முட்டை ஓட்டில் தடவப்படும் நிறம் முட்டையின் உள்ளே செல்லும் என்று, அவர்கள் அறிக்கை கொடுத்தார்களா?
கொடுத்தாலும் கொடுத்திருப்பார்கள், காரணம் அவர் சான்றிதழ் கொடுத்ததாக சொல்லும் நிறுவனம் அமைச்சர் சக்கரபாணியின் கீழ் இயங்கும் ”உணவு பாதுகாப்புத்துறை”யின் கீழ் வருவது!
கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மேல் முறையீடு செய்யப்படுவதைப்போல, இந்த விஞ்ஞான கருத்தை மேல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்!
பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்த விசயத்தில் ஏன் கேள்வி எதையுமே எழுப்பவில்லை? ஏன் அமைச்சரை கிண்டல் செய்யவில்லை? விவாதம் நடத்தவில்லை?
குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாயிற்றே என ஏன் பத்திரிக்கைகள் பதறவில்லை?
” அழுகிய முட்டை புகழ் அமைச்சராக அமைச்சர் கீதா ஜீவன் இருக்கிறார்! சமீபத்தில் 2000 அழுகிய முட்டைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன” என மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் குற்றஞ்சாட்டியதற்கு பதிலளிக்கும் வகையில்தான் அமைச்சர் கீதா ஜீவன் இப்படி ஒரு விஞ்ஞானத்தை வெளிப்படுத்தியுள்ளார்!
இந்த கோமாளி விஞ்ஞானம் பொய் என நிரூபிக்கப்படும் வேளையில், மக்கள் தலைவர் அன்ணாமலை அவர்கள் முன்வைத்த முட்டை ஊழல் உண்மை என்றாகிறது!
முட்டை பள்ளிகளில் வழங்கிட தேவையான நிதியை மத்திய அரசுதான் வழங்குகிறது!
மாணவர்களுக்கும் இளம் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து வழங்கப்படவேண்டும் என்பது மாநில அரசின் திட்டமல்ல இது மத்திய பாஜக அரசின் திட்டமாகும்!
ஒரு குறிப்பிட்ட தொகை மாநில நிதியிலிருந்தும் ஒதுக்கப்படுகிறது! ஆனால் ஊட்டச்சத்து முட்டை வழங்கும் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும்!
தமிழகத்தில் ஆளும் தரப்பினர் அவர்களாக முட்டை வழங்குவதாக ரீல் விடுவார்கள், உண்மை அதுவல்ல, மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் நிதி ஒதுக்கல் காரணமாகத்தான் வேறு வழியில்லாமல் இங்கு முட்டை வழங்கப்படுகிறது!
இந்த திட்டத்திற்காக தேசம் முழுமையும் வருடா வருடம் மத்திய அரசால் ஏறத்தாள ரூ35000 கோடி ரூபாயும்- அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு ஊட்ட சத்து வழங்கும் நோக்கத்தில், முட்டை போன்ற இந்த ஊட்ட சத்து உணவுகள் வழங்கப்படுவதற்காக மத்திய அரசின் ICDS ( Integrated Child Protection Scheme ) திட்டத்தின் கீழ் ரூபாய் ரூ25000 கோடியும் மத்திய அரசால் ஒதுக்கப்படுகிறது! மொத்தம் 60,000 கோடி!
தமிழக மாநிலத்திற்கு ஏறத்தாள ரூபாய் 2000 முதல் 5000 கோடியை மத்திய அரசு வருடா வருடம் இந்த திட்டத்திற்காக தருகிறது!
மத்திய அரசின் நிதியில்தான் இந்த முட்டை ஊழலும் நடக்கிறது!
தேசம் முழுமையும் அந்தந்த மாநில உணவு வழக்கம் படி முட்டையோ அல்லது வேறுவகையான சத்துணவோ வழங்கப்பட்டு வருகிறது!
மத்திய அரசின் ஊட்டசத்து திட்டத்தை விஷத்திட்டமாக மாற்ற முற்பட்ட அமைச்சர் கீதா ஜீவனுக்கு கடுமையான தண்டணை வழங்கப்படவேண்டும்!
இந்த விஞ்ஞான அமைச்சர் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடுத்தால், என்னென்ன குற்றச்சாட்டுகளை முன் வைக்கலாம் என பார்க்கலாம்!
”உணவில் விஷம் கலத்தல், பள்ளிக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்திலேயே ஊழல் செய்தல், கற்பனை கதைகளை நிரூபர்கள் மத்தியில், மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டு மக்களை முட்டாளாக்க முயற்ச்சித்தல், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தது”- ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கீதா ஜீவனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது! எனத் தெரிவித்துள்ளார்.