காசாவில் உள்ள மருத்துவ ஊழியர்களை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்ததாக வெளியான செய்திக்கு பிபிசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்களையும் அரபு மொழி பேசுபவர்களையும் இஸ்ரேல் குறிவைத்ததாக பிபிசியில் செய்தி வெளியானது.
காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவக் குழுக்கள் மற்றும் அரபு மொழி பேசுபவர்கள் உட்பட மக்களை இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து வருகின்றன” என்று பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்ததாக பிபிசி செய்தி தொகுப்பாளர் மேற்கோள் காட்டினார்.
ஆனால், நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உதவுவதற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட இஸ்ரேலிய தற்காப்புப் படையில், மருத்துவக் குழுக்கள் மற்றும் அரபு மொழி பேசுபவர்கள் இருந்தனர் என அந்த செய்தி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் குறித்து தவறான செய்திக்கு பிபிசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிபிசி இணையத்தளப் பக்கத்தில் விரிவான விளக்கத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.