சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.57 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதன் மூலம் 1,999.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.1,942 – ஆக குறைந்துள்ளது. இதனால் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் ஏதுமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.