இன்று தேசிய பத்திரிகையாளர்கள் தினம். ஆண்டுத்தோறும் நவம்பர் 6 ஆம் தேதி தேசிய பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பத்திரிகைத் துறையில் தொழில்முறை நெறிமுறைகளைப் காப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் கொண்ட நோக்கத்திற்காக இந்திய பத்திரிகை கவுன்சில் நவம்பர் 16 ஆம் தேதி 1966 ஆம் ஆண்டு அன்று நிறுவப்பட்டது.
ஆகையால் இந்த தினத்தை இந்திய பத்திரிக்கைக் கவுன்சில், தேசிய பத்திரிகையாளர்கள் தினமாக அறிவித்தது.
உலகெங்கிலும் பல பத்திரிகைகள் அல்லது ஊடக கவுன்சில்கள் இருந்தாலும், இந்திய பத்திரிக்கை கவுன்சில் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கடமையில் அதிகாரம் செலுத்தும் அமைப்பு ஆகும்.
சமூகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக திகழும் பத்திரிகையாளர்களையும், ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியாளர்களையும் கெளரவிக்கும் நாளாக இந்நாள் உள்ளது.