50 சதங்களை அடித்து சரித்திர சாதனை படைத்த விராட் கோலிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது.
இந்தப் போட்டியில் விராட் கோலி தனது 50 வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில் சச்சின் டெண்டுல்கரின் 20 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை அடித்திருந்த நிலையில் விராட் கோலி அதனை முறியடித்து 50 சதங்களுடன் முன்னிலை வகிக்கிறார்.
மேலும் ஒரே உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் டெண்டுல்கரின் 673 ரன்கள் என்ற சாதனையை முறியடித்து விராட் கோலி 711 ரன்களுடன் முன்னிலையில் உள்ளார்.
யாரும் எட்ட முடியாத இலக்கை எட்டிய விராட் கோலிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ” விராட் கோலி ஒரு நாள் போட்டியில் தனது 50வது சதத்தை பதிவுசெய்துள்ளார். இது அவரின் சிறந்த விளையாட்டு திறனையும், விடா முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது.
வருங்கால இளைஞர்களுக்கு அவரின் சாதனை ஒரு இலக்காக அமையும் மேலும் அவர் வரவிருக்கும் போட்டிகளில் வருங்கால இளைஞர்களுக்கு ஒரு சாதனை இலக்கை நிர்ணயிக்க வேண்டும். விராட் கோலி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ” என்று பாராட்டியுள்ளார்.