அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 பேராசிரியர்கள் அரசு தகுதி விதிமுறைகளின்படி பணியில் சேராமல், பணியாற்றிய நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போதிய தகுதி இல்லாத காரணத்தால் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போலி கல்விச் சான்றிதழ்களை வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் பணியாற்றி வரும் 18 பேருக்கு பணிநீக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பணி நிரவலில் சென்று வெளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் 38 பேருக்கு கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மூலம் உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி, பல்கலை. வளாகத்துக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு உடைமையாக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா ஊழியர்களின் தகுதி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.