தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உட்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு, அதாவது இரவு 7 மணி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழையும் நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.