ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் இரண்டாவது அணியாக ஆஸ்திரேலியா அணி நுழைந்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் தேம்பா பாவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா களமிறங்கினர். இந்த உலகக்கோப்பைத் தொடரில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து வந்த குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா தென் ஆப்பிரிக்காவுக்கு மிக முக்கியமான போட்டியான அரையிறுதியில் இருவரும் மிகவும் மோசமாக விளையாடினர்.
டெம்பா பவுமா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து குயின்டன் டி காக் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் இணை சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்த நேரத்தில் அவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதில் ஐடன் மார்க்ரம் 2 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 10 ரன்களிலும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 31 பந்துகளில் 6 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர்.
தென் ஆப்பிரிக்காவின் நிலையை கண்டு வானமே அழுதது போல் அப்போது மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.
மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் கூட்டணிச் சற்று சிறப்பாக விளையாடி வந்தது.
இவர்கள் இருவரும் அணியை முன்னேற்றி வந்தனர். 100 ரன்கள் கூட தாண்ட வாய்ப்பில்லை என்று நினைக்கும் சமயத்தில் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியாக இந்த கூட்டணியும் முடிவுக்கு வந்தது. ஹென்ரிச் கிளாசென் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 48 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கோ ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகா அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸி 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அப்போது சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மில்லர் சதம் அடித்து ஆட்டமிழந்தார். மொத்தமாக டேவிட் மில்லர் 8 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என 101 ரன்களில் ஆட்டமிழந்துப் போனார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் முதல் 5 ஓவர்களை சரியாக பயன்படுத்தி ரன்களை குவித்தனர். 6-வது ஓவரில் டேவிட் வார்னர் 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 29 ரங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகா இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக விளையாடி வந்தார்.
அப்போது தொடக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 62 ரங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சிறப்பாக விளையாடி வந்த ஸ்டீவ் ஸ்மித் 30 ரன்களும், பின்னர் களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே 18 ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்க மிட்செல் ஸ்டார்க் 16 ரன்களும் மற்றும் பாட் கம்மின்ஸ் 14 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிப் பெற செய்தனர்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 48 வது ஓவரில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 215 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்று இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்ஸி மற்றும் தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் தனது இறுதி வாய்ப்பை இழந்தது. தென் ஆப்பிரிக்கா ரசிகர்களும் வீரர்களும் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மேலும் இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 2 விக்கெட்கள் மற்றும் 62 ரன்களை அடித்த ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்க்கு வழங்கப்பட்டது.