2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை காண பாரத பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 48 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 47 போட்டிகள் முடிவடைந்துள்ளது.
நவம்பர் 19 ஆம் தேதி இறுதிப்போட்டி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளனர். 3 வது முறையாக தனது சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்திய அணியும், 6 வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா அணியும், 20 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்த நிலையில், 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியை காண பாரத பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வருகை இந்திய அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.