இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024-ம் நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகளை வழங்கி இருக்கிறது. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.
இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் கடந்த 2013-14-ம் நிதியாண்டில் 4,227 காப்புரிமைகளை மட்டுமே வழங்கி இருந்தது. பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, பல்வேறு திட்டங்களின் மூலம் காப்புரிமைகளை அதிகரிக்கச் செய்தார். இதன் பயனாக, இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024-ம் நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகளை வழங்கி இருக்கிறது.
இது குறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ”இது 2023-24-ம் ஆண்டில் இதுவரை வழங்கப்பட்ட மிக அதிகமான காப்புரிமைகள்.
இது ஒரு சாதனையாகும். பிரதமர் நரேந்திர மோடியின் புதுமை தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அறிவுப் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சர் பியூஷ் கோயலின் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரதமர் மோடி, “அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய நமது பயணத்தில் இது ஒரு மைல்கல். இந்திய இளைஞர்கள் இந்த முன்னேற்றத்தால் நிச்சயம் பயன்பெறுவார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே, உலக அறிவுசாா் சொத்துரிமை அமைப்பின் ஆண்டறிக்கையில், “கடந்த 11 ஆண்டுகளாக அதிகளவிலான காப்புரிமை விண்ணப்பங்களை இந்தியா பதிவு செய்து வருகிறது.
காப்புரிமை பதிவில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகளின் வளா்ச்சி விகிதத்தைவிட இந்தியாவின் வளா்ச்சி விகிதம் அதிகமானது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
This is a notable feat, marking a milestone in our journey towards an innovation-driven knowledge economy. India’s youth will be great beneficiaries of such strides. https://t.co/IQ6IJIYrBZ
— Narendra Modi (@narendramodi) November 17, 2023