தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று தமிழக அணி அசாம் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் இன்று சென்னையில் தொடங்குகிறது. இன்று முதல் 28 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தத் தொடரில் 29 அணிகள் பங்கேற்கின்றன. மேலும் 29 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் ‘எ’ பிரிவில் நடப்பு சாம்பியனான ஹரியானா, சத்தீஸ்கர் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் தமிழகம், அசாம் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் ஆகிய அணிகளும், ‘சி’ பிரிவில் கர்நாடக, பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
‘டி’ பிரிவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் திரிபுரா ஆகிய அணிகளும், ‘இ’ பிரிவில் பெங்கால், மத்திய பிரதேஷ், ஜம்மு & காஷ்மீர் மற்றும் மணிப்பூர் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
‘எப்’ பிரிவில் ஜார்கண்ட், சண்டிகர், ஆந்திர பிரதேசம் மற்றும் கோவா ஆகிய அணிகளும், ‘ஜி’ பிரிவில் உத்திர பிரதேசம், புதுச்சேரி, கேரளா மற்றும் ராஜஸ்தான் அணிகளும் இடப்பெற்றுள்ளனர்.
‘எச்’ பிரிவில் டெல்லி, ஒடிசா, தெலுங்கானா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இதில் அனைத்து பிரிவுகளிலும் முதல் இடத்தில் உள்ள அணிகள் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். காலிறுதியில் வெற்றிப் பெறும் அணிகள் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் பங்குபெறும். இறுதிப்போட்டி 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும் இன்றைய நாளில் நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில் தமிழகம், அசாம் உடன் சென்னையில் இன்று விளையாட உள்ளது.