இந்திய அணி 1-0 என்ற கணக்கில் குவைத் அணியை வீழ்த்தியுள்ளது. இந்திய அணி சார்பில் மன்வீர் சிங் 75 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
2026 ஆம் ஆண்டு ஆண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2 வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்றுள்ளன.
36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக் போட்டியில் விளையாடவுள்ளன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3 வது சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்தியா ‘ஏ’ பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குவைத் சிட்டியில் நேற்று இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான முதல் லீக் போட்டி நடைபெற்றது.
இதில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் குவைத் அணியை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் மன்வீர் சிங் 75 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
அதன்பின் இந்திய வீரர்களும், குவைத் வீரர்களும் கோல் அடிக்க போரடிய நிலைய யாராலும் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்தியா 1-0 என்ற கணக்கில் குவைத்தை அணியை வீழ்த்தியது.