ஆர்மீனியாவிற்கு 1,50,000 யூனிட் 30 மிமீ மற்றும் 40 மிமீ கையெறி குண்டுகளை இந்தியா வழங்க உள்ளது.
காகசஸில் உள்ள தனது நட்பு நாடான ஆர்மீனியாவுக்கு அதிக இராணுவ உபகரணங்களை வழங்க இந்தியா பரிசீலித்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆர்மீனியாவிற்கு 5 மில்லியன் யூனிட் 7.62 மிமீ காலிபர் தோட்டாக்களை இந்தியா வழங்கியது.
ரூ.100 கோடி மதிப்பிலான இறக்குமதியை மிச்சப்படுத்த இந்தியா இந்த கையெறி குண்டுகளை உருவாக்கி வருகிறது. அவசர காலங்களில் இந்த வெடிகுண்டுகள் ராணுவத்திற்கு கிடைக்கும்.
பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர்கள், டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள், ராக்கெட்டுகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை ஆர்மீனியாவுக்கு இந்தியா கடைசியாக வழங்கியது. ஆர்மீனியாவுடன் உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் ஈரான் மூலம் ஆயுதங்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா, ஈரான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் போக்குவரத்து வழித்தடத்தை ஆராய்வதற்காக முத்தரப்பு அமைப்பை உருவாக்கின. இதுதொடர்பாக கடந்த ஏப்ரலில் மூன்று தரப்பினரும் விவாதித்தனர்.
சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை (INSTC) பிராந்திய இணைப்பு முயற்சியாக பயன்படுத்துவது குறித்தும் முத்தரப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.