ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை படைத்த முகமது ஷமிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மணல் சிற்பத்தில் அவருடைய உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றை, இனி எப்ப திறந்து பார்த்தாலும், இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருக்கப்போவது முகமது ஷமியின் சாதனை தான்.
காரணம், ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவரின் சாதனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், ஒடிசாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி உள்ளார். இதனை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.