6 விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை அ்ண்ணாமலை போராட்டம் அறிவித்த நிலையில் அதனை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
செய்யாறு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டம்-ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்து, பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்ததன் காரணமாக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் குடும்பத்தினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, அவர்களை குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையிலிருந்து விடுவிக்க ஆணையிட்டுள்ளது.
அதனடிப்படையில், மேற்குறிப்பிட்டுள்ள 6 நபர்களின் மேல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து திருவண்ணாமலையில் தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில் குண்டர் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.