சூரசம்ஹாரத்தை காண பழனியில் குவியும் பக்தர்கள்
பழனி முருகன் கோவில் அடிவாரத்தில் சூரசம்ஹாரம் விழா இன்று மாலை நடைபெறுகிறது.
கந்த சஷ்டி திருவிழா நவ.13 ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்நிலையில் சூரசம்ஹாரம் இன்று மாலை அடிவாரத்தில் கிரிவீதியில் நடைபெறுகிறது
இன்று அதிகாலை 4:00 மணிக்கு முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 4:30 மணிக்கு விளாபூஜை நடைபெற்றது. மதியம் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறுகிறது.
மாலை 6:00 மணிக்கு கிரி வீதியில் சூரம்சம்ஹாரம் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று காலை 11:30 மணிக்கு கோயிலில் அனைத்து கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும்.
காலை 11:00 மணி முதல் படிப்பாதை, வின்ச், ரோப்கார் மூலம் பக்தர்கள் மலைக்கோயில் செல்லவும் அனுமதி இல்லை.
இரவில் தங்க ரத புறப்பாடும் நடைபெறாது. சூரசம்ஹார விழாவை காண ஏராளமான பக்தர்கள் பழனியில் திரண்டுள்ளனர்.