தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ரவி மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார். அந்த மசோதா குறித்த சில விளக்கங்களையும் ஆளுநர் ரவி கேட்டுள்ளார்.
மருத்துவப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, சட்டப் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அன்னை தெரசா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.