ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பகுதிக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்றது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி தான் விளையாடிய 10 போட்டிகளில் 10 போட்டியிலும் வெற்றிப் பெற்று அசைக்க முடியாத ஒரு அணியாக திகழ்கிறது.
இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக திகழ்பவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. அவரின் வழிகாட்டுதலால் இந்தியா இன்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது என்றே சொல்லலாம்.
இதுமட்டுமின்றி ரோஹித் சர்மா ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர். இரட்டை சதத்திற்கும், சிக்சர்களுக்கும் பெயர் போனவர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ரோஹித் சர்மா தனது கடின உழைப்பால் இன்று அனைவரும் போற்றும் ஒரு மனிதராய் உருவெடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மா குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பரீச்சயமான ரோஹித் சர்மாவின் பெருமை வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் தெரியப்படுத்தும் விதமாக பொது அறிவு பாடப் புத்தகத்தில் ரோஹித் சர்மாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அந்த புத்தகத்தில் ரோஹித் சர்மாவின் வாழ்க்கை வரலாறு ஒரு பக்க அளவில் குறிப்பிட பட்டுள்ளது.