ராஜஸ்தானை அழித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு!
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தானை அழித்த காங்கிரஸ்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 19, 2023, 05:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மக்களின் பணத்தை கொள்ளையடித்து ராஜஸ்தான் மாநிலத்தையே காங்கிரஸ் கட்சி அழித்து விட்டது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் சுருவிலுள்ள தாராநகர் மற்றும் ஜுன்ஜுனுவில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசுகையில், “இப்போது நாடு முழுவதும் கிரிக்கெட் ஆர்வத்தால் நிறைந்திருக்கிறது. கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் வந்து தனது அணிக்காக ரன் குவிக்கிறார். அவர்களிடையே சண்டை இருக்கிறது. ஆனால், அவர்கள் பரஸ்பரம் ஓடுவதில் மும்முரமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. ஒருவரையொருவர் வெளியேற்றுவதில் காங்கிரஸ் ஆட்சியின் 5 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

ராஜஸ்தான் ஒரு துணிச்சலான பூமி. இந்த மாநில மகன்களின் வீரம் முழு நாட்டையும் பாதுகாப்பாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட மண்ணின் குழந்தைகளை ஏமாற்ற காங்கிரஸ் எந்த சந்தர்ப்பத்தையும் விட்டு வைக்கவில்லை.

‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ பிரச்சனையில் காங்கிரஸ் இங்குள்ள துணிச்சலானவர்களை பல தசாப்தங்களாக சிக்கலில் வைத்திருந்தது. அவர்களை தவறாக வழிநடத்தியதோடு, மிகவும் கஷ்டப்படுத்தியது.

நீங்கள் பா.ஜ.க.வை தேர்வு செய்தால், ராஜஸ்தானில் இருந்து ஊழல்வாதிகளின் அணியை தூக்கி எறிவோம். பா.ஜ.க. வளர்ச்சியை துரிதப்படுத்தும். இதன் மூலம் ராஜஸ்தானுக்கும், ராஜஸ்தானின் எதிர்காலத்திற்கும், ராஜஸ்தானின் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் வெற்றி கிடைக்கும். காங்கிரஸின் கொள்ளை உரிமத்தின் முழுக் கதையும் லால் டைரியில் பதிவாகி, தற்போது மெல்ல மெல்ல டைரியின் பக்கங்கள் திறக்க ஆரம்பித்திருக்கின்றன.

நாட்டில் இன்று கோடிக்கணக்கான மக்கள் இலவச மருத்துவ சேவைகளைப் பெறுகின்றனர். மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடியில் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

100 ரூபாய் மதிப்புள்ள மருந்து 20 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதனால், ஏழைகளின் மொத்த ரூபாய் 1.25 லட்சம் கோடி சேமிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தனது எம்.எல்.ஏ.க்களும் வேட்பாளர்களும் எந்தப் பணியையும் செய்யவில்லை என்பதை முதல்வர் கெலாட் பொதுவெளியில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

இதற்குக் காரணம், ராஜஸ்தானில் மந்திரவாதி மற்றும் பாசிகர் விளையாட்டு நடந்து வருகிறது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர்கள் பணத்தை கொள்ளையடிப்பதில் மும்முரம் காட்டினர். ராஜஸ்தானை அழித்த காங்கிரஸ் மீண்டும் இங்கு ஆட்சிக்கு வர வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.

Tags: PM ModiElectionRajasthanCompaign
Share
Tweet
SendShare
Previous Post

ஆதித்யா எல்-1, ககன்யான் பயணங்கள் மனிதகுலத்துக்கு உதவும்: குடியரசுத் தலைவர் முர்மு!

Next Post

பாடப் புத்தகத்தில் ரோஹித் சர்மா !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies