இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து எழுதியுள்ள கடிதத்தில்,
On behalf of @BJP4TamilNadu, we request the kind intervention of our Hon EAM Thiru @DrSJaishankar avl for the early repatriation of the 22 Tamil fishermen detained by the Sri Lankan Navy. @VMBJP pic.twitter.com/bSX8ZRhyc4
— K.Annamalai (@annamalai_k) November 18, 2023
இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இன்று கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மத்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக நாடு திரும்பவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.