கடந்த 1828 -ம் நவம்பர் 19, ஆண்டு தற்போதைய வாரணாசியில் மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் ராணி லக்ஷ்மி பாய். 4 -வது வயதில் தாயை இழந்தார். தந்தையின் ஆதரவோடு வளர்ந்தார். பள்ளி செல்லும்போதே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், கத்தி சண்டைகளில் தூள் கிளப்பினார்.
1842 -ம் ஆண்டு, ஜான்சி மகாராஜாவான, ராஜா கங்காதர் ராவ் நிவால்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை 4 வயதில் உயிரிழந்தது.
இதனால், ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார். அவரது கணவர் மரணத்திற்குப் பின்பு, ஆங்கிலேயர்கள் அந்தக் குழந்தையைச் சட்ட வாரிசாக ஏற்க மறுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்றனர்.
இதனால், ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆண்கள், பெண்கள் இணைத்து ஒரு புதிய படையை உருவாக்கினார். இந்தப் படை ஓர்ச்சா, டாடியா -வை கைப்பற்றியது.
ஆனால், 1858 -ல், பிரிட்டிஷ் இராணுவம், ராணி லக்ஷ்மி பாய் உடன் போரிட்டு, ஜான்சி நகரத்தைக் கைப்பற்றியது.
இதனால், ஆண் வேடத்தில், வளர்ப்பு மகனுடன் தப்பித்த ராணி லக்ஷ்மி பாய், கல்பியில் தஞ்சம் அடைந்தார்.
அப்போது, ஆங்கிலேயர்களின் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சி ராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 1858 -ல் ஜூன் 18-ம் தேதி ஜான்சி ராணி வீரமரணம் அடைந்தார்.
இதனால், சுதந்திரப் போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ராணி லட்சுமிபாய் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகிறார்.