சூரியக் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யும் ‘சாத்’ என்கிற பண்டைய இந்து பண்டிகையை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
வேத சாஸ்திரத்தின் படி, சத்தி மையா (சத்தி மாதா) குழந்தைகளை நோய்கள் மற்றும் தொல்லைகளில் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. ஆகவே, இந்நாளில் சூரியக் கடவுளுடன் தேவி பிரகிருதியின் 6-வது வடிவமான சத்தி மையா எனப்படும் சூரியனின் சகோதரி திருவிழாவில் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
அந்த வகையில், இன்று சாத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இப்பண்டிகை நேபாளம், பீகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழத்துத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மகாபர்வ சத்தின் சந்தியா அர்க்யாவின் மங்களகரமான தருணத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். சூரிய பகவானின் வழிபாடு அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் உண்டாக்கட்டும். ஜெய் சத்தி மையா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
महापर्व छठ के संध्या अर्घ्य के पावन अवसर पर अपने सभी परिवारजनों को मेरी अनंत शुभकामनाएं। सूर्यदेव की वंदना हर किसी के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करे। जय छठी मइया!
— Narendra Modi (@narendramodi) November 19, 2023
அதேபோல, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சாத் பண்டியையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் யோதி தனது எக்ஸ் பதிவில், “சூரிய வழிபாடு மற்றும் நாட்டுப்புற நம்பிக்கையான ‘சாத்’ எனும் மாபெரும் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து பக்தர்களுக்கும், மாநில மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாஸ்கர் மற்றும் சத்தி மையாவின் புனித ஆசீர்வாதத்துடன் அதிர்ஷ்டம் உண்டாகட்டும். ஜெய் சத்தி மையா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
सूर्योपासना और लोक आस्था के महापर्व 'छठ' की सभी श्रद्धालुओं एवं प्रदेश वासियों को हार्दिक बधाई व शुभकामनाएं!
भगवान भास्कर और छठी मइया के पावन आशीर्वाद से चराचर जगत सुख, समृद्धि व सौभाग्य के आलोक से आलोकित रहे, यही अभिलाषा है।
जय छठी मइया! pic.twitter.com/rrIY7W3VHZ
— Yogi Adityanath (@myogiadityanath) November 19, 2023