பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் உலகக்கோப்பையை வரைந்து பக்கத்தில் இந்திய தேசிய கொடி மற்றும் ஆஸ்திரேலியா கொடி ஆகியவை வரைந்து, பல கிண்ணங்களை கொண்டு அலங்காரம் செய்துள்ளார்.
ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவு பகுதிக்கு வந்துள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி தான் விளையாடிய 10 போட்டிகளில் 10 போட்டியிலும் வெற்றிப் பெற்று அசைக்க முடியாத ஒரு அணியாக திகழ்கிறது.
மேலும் இறுதிப்போட்டியில் இந்திய அணியே வெற்றிப் பெற வேண்டும் என்று பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நேற்று ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிப் பெற வேண்டி 56 அடி நீளமுள்ள உலகக்கோப்பை மணல் சிற்பத்தை செய்தார் .
அதனைத் தொடர்ந்து இன்று ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் உலகக்கோப்பையை வரைந்து பக்கத்தில் இந்திய தேசிய கொடி மற்றும் ஆஸ்திரேலியா கொடி ஆகியவை வரைந்து, பல கிண்ணங்களை கொண்டு அலங்காரம் செய்துள்ளார்.
மேலும் ‘குட் லக், டீம் இந்தியா’ என்று எழுதி தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.