பிரபல நடிகை த்ரிஷா மீது அருவருக்கத்தக்க வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பதிவில், நடிகை த்ரிஷா குறித்துப் பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருக்கிறார்.
சுயவிளம்பரத்திற்காக இது போன்று செயல்படும் நபர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நடிகை த்ரிஷா குறித்து இழிவாகப் பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.