சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பையில் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பட கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக வழங்கி உள்ளார்.
2023 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 50 வது சதத்தை அடித்து அசத்தினார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை விராட் கோலி முறியடித்தார்.
இறுதிப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் உள்பட பல்வேறு முன்னணி வீரர்கள், பிரபலங்கள் என பலரும் மைதானத்திற்கு வந்துள்ளனர்.