திருமலை – திருப்பதியில் 7 டன் பூக்கள் மூலம் வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்றது திருமலை – திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் வருடாந்திர புஷ்ப யாகம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. புஷ்ப யாகத்தின் போது ஏழுமலையான், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து, திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏழுமலையானுக்கு, பால், தேன், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் புஷ்ப அபிஷேகம் செய்யப்பட்டது.
வருடாந்திர புஷ்ப யாகத்திற்காக ஏழு டன் அளவு உள்ள பலவிதமான பூக்கள் வரவழைக்கப்பட்டு இருந்தது. நான்கு மணி நேரம் இந்தப் புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.