விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 30க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் சாம்பலாயின.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஒரு படகில் இருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்கு பரவியது.
இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. தீயை கட்டுப்படுத்த முடியாததால் இந்திய கடற்படை கப்பல் ஒன்று வரவழைக்கப்பட்டது.
படகுகளில் டீசல் கொள்கலன்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அப்பகுதிக்கு தீயணைப்பு படையினர் செல்வதில் கடும் சவால் ஏற்பட்டது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அப்பகுதி இளைஞர்கள் சிலர் படகு ஒன்றில் பார்ட்டி நடத்தியதாகவும், அப்போது தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.