தூத்துக்குடியில் ஏழை, எளிய பொது மக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளைக் குறிவைத்து மதமாற்றம் நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது.
ஒரே முகவரியில் செயல்படும் ஜீசஸ் ரிடீம்ஸ் மற்றும் நியூ லைஃப் சொசைட்டி ஆகிய இரண்டு அரசு சாரா நிறுவனங்கள் தான் இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது.
குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ள மைனர் குழந்தைகளுக்கு வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்துகின்றன.
இந்த இரண்டு பிரபல நிறுவனங்கள் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி. லாசரஸ்-க்குச் சொந்தமானவையாகும்.
ஜீசஸ் ரிடீம்ஸ் தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் நியூ லைஃப் சொசைட்டி-க்காக வெளிநாட்டு நிதியை திரட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
நியூ லைஃப் சொசைட்டி என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக, குழந்தை மேம்பாட்டு மையம் என்ற பெயரில் முதலில் 83 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது 209 ஏழைக் குழந்தைகள் அங்கு உள்ளனர்.
இதுபோலவே, கருணா பால் விகாஸ் என்ஜிஓ என்ற அமைப்பும் புகாரில் சிக்கியுள்ளது. வெளிநாட்டு நிதி மூலம் குழந்தைகளை மதமாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு எதிராகச் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்த இரண்டு அரசு சாரா நிறுவனங்களுக்கும் FCRA உரிமங்களை ரத்துச் செய்ய உள்துறை அமைச்சகத்தின் FCRA பிரிவுக்கு அனுப்ப வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்கா-வைச் சேர்ந்த காம்பாஷன் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து சென்னையைச் சேர்ந்த கருணா பால் விகாஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட வெளிநாட்டு நன்கொடைகள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
தரவுகளின்படி, ஜீசஸ் ரிடீம்ஸ் ரூ.1,67,68,189 பெற்றுள்ளது. 2009 முதல் 2015 வரை கருணா பால் விகாஸிடம் இருந்து ரூ.1.5 கோடிக்கு மேல் ‘குழந்தைகளின் நலன்’ என்ற பெயரில் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
மொத்தத்தில், ஜீசஸ் ரீடீம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.1,13,04,681 தொகையை அதன் நியமிக்கப்பட்ட FCRA வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெற்றுள்ளது. இதனால், இந்த அமைப்பு பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.