அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் வினோ தாமஸ், மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பாம்பாட்டி பகுதியில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது.
அந்தக் காரின் உள்ளே ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது தெரிய வந்தது. அந்த நபர் காரில் இருந்து நீண்ட நேரமாகியும் இறங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, காருக்குள் அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் வினோ தாமஸ் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காரின் ஏசியில் இருந்து விஷவாயு கசிவு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் வினோ தாமஸ், ஒருமுறை வந்து பார்த்தா, நெத்தோலி ஒரு செரிய மீன்ல்ல, ஹேப்பி வெட்டிங் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.