நமக்குத் தேவைப்படும் போது நம் அனைவருக்கும் தோள் கொடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி இங்கே இருக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் கடந்த 19 -ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனையடுத்து, 6-வது முறையாக உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது எக்ஸ் பதிவில்,
For our PM Thiru @narendramodi avl, success is not defined conventionally
For him, Success is
– 100% effort
– Country first
– Playing with a spirit of Sportsmanship
& Bouncing back from any obstaclesHe is here to shoulder all of us when we need him.
My PM, My Pride! pic.twitter.com/9qqBdIMiLm
— K.Annamalai (@annamalai_k) November 20, 2023
வெற்றி வழக்கமாக வரையறுக்கப்படவில்லை, நாடுதான் நமக்கு முக்கியம் என்றும், தடைகளில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றும், நமக்குத் தேவைப்படும் போது நம் அனைவருக்கும் தோள் கொடுக்கப் பிரதமர் நரேந்திர மோடி இங்கே இருக்கிறார், எனது பிரதமர், எனது பெருமை என்று தெரிவித்துள்ளார்.