நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம்!
Aug 19, 2025, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம்!

- நிர்மலா சீதாராமன்!

Web Desk by Web Desk
Nov 20, 2023, 10:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்

உலகப் பாரம்பரிய வார விழா நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவை இணைந்து ”தென் தமிழக கோயில்கள்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சியை மதுரை தியாகராசர் கல்லூரி வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் இன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய அமைச்சர், “தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக சிற்பங்களாக வடித்துள்ளனர் என்றார்.

அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய இடங்களில் வெள்ளை அடித்து விடுகிறார்கள். வெள்ளை அடிக்கபட்டதற்கு பின்னால் உள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை, என்ற அவர், தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்து உள்ளது.

மனதுக்கு வேதனையாக உள்ளது, தமிழ் இலக்கியங்களுக்கும் குடைவரை கோவில்களுக்கும் நெடிய தொடர்புகள் உள்ளன, குடைவரை கோவில்களில் உள்ள எழுத்துக்களுக்கும் தமிழ் மொழியின் ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்புள்ளன என்றார்.

மேலும், நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம், அதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற கூறிய அமைச்சர், மாணவர்கள் மருத்துவர், பொறியாளர் என ஆகலாம், ஆனால் நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து பாதுகாக்க வேண்டும் என்றார்.

மேலும் நமக்கு அருகிலுள்ள பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் பல்வேறு இடங்களுக்கு சென்று அனைவரும் அதனை பார்வையிட  வேண்டும் என்றும் அவ்வாறு பார்த்தவற்றை அதன் பழமை குறித்தும் அறிந்து கொண்டு தகவல்களை செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு சமூக ஊடகங்கள் வழியாக பகிரவேண்டும் அப்போது தான் அனைவரும் இதைப்பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றும், குறிப்பாக மாணவ மாணவியர் இதனை ஆர்வத்துடன் செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், திருச்சி குடைவரைக் கோயில், திருமயம் கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சித்ரால் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் பாரம்பரிய வாரவிழா கொண்டாடப்படவுள்ளது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறிவுசார் போட்டிகளுக்கு இந்திய தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா!

Next Post

  ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்  ரிச்சர்ட் மார்லெஸுடன் மத்தியமைச்சர்  ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை!

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies