ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!
Oct 10, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக்கொலை: மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஐ.ஆர்.பி. வீரர் உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேரும் கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அச்சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக கூகி மற்றும் மெயிட்டி சமூகத்தினருக்கு இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது.

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, கூகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு எதிரான நடைபெற்ற வன்முறை வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதில், ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக மாநிலத்தில் அமைதி திரும்பியது.

எனினும், அவ்வப்போது சிறு சிறு சச்சரவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் கூகி சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் நேற்று இரு பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.) வீரரும், அவரது டிரைவரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஹராதெல் மற்றும் கோப்ஷா கிராமங்களுக்கு இடையே இந்த மோதல் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவருமே கூகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

ஆகவே,  காங்போக்பி மாவட்டத்தைத் தளமாகக் கொண்ட பழங்குடியினர் ஒற்றுமை குழு, தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் காங்போக்பி மாவட்டம் முழுவதும் உடனடி கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது.

அப்போது, மணிப்பூரில் பழங்குடியின சமூகங்களுக்கு தனி நிர்வாக அமைப்பை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

Tags: 2 killedmanipurviolence
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்!

Next Post

கடைசி தங்கப்பதக்கம் : முதலும் இவரே முடிவும் இவரே !!

Related News

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

வெனிசுலா பெண்மணிக்கு “அமைதிக்கான நோபல் பரிசு” : குட்டிக்கரணம் அடித்த ட்ரம்புக்கு ஏமாற்றம்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

காவலாளி TO சாப்ட்வேர் என்ஜினீயர் : இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய ZOHO நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies