சென்னை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் விமானம் மீது, டிராக்டர் வாகனம் மோதியதால் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று, சென்னை டூ திருச்சி செல்வதற்காக ஓடுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது, ஓடுதளம் அருகே சென்று கொண்டிருந்த டிராக்டர் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென விமானத்தின் மீது மோதியது. இதில், விமானம் சேதமடைந்தது. மறு அறிவிப்பு வரும் வரை சேதமடைந்த விமானத்தை இயக்க சிவில் விமான போக்குவரத்துறை தடை விதித்தது.
இதனால், விமானத்தை இயக்குவதற்குப் பிசிஏஎஸ் விமானப் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை டூ திருச்சி செல்லும் 4 விமானங்கள் மற்றும் திருச்சி டூ சென்னை செல்லும் 4 விமானங்களை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இதேபோல, இன்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, விமானப் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.