சங்கர நேத்ராலயா மருத்துவமைனை நிறுவனர் எஸ். பத்ரிநாத்தின் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் அகிலப் பாரதச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை சங்கர நேத்ரயாலயா மருத்துவமனையை 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிறுவினார், இந்த மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்கும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கும் கூட சிறந்த சேவையை வழங்கி வருகிறது.
அவர் 4 தசாப்தங்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்தார். சங்கம் மற்றும் சங்க காரியகர்த்தாக்களுடன் ஸ்ரீ காசிநாதன் முதல் ஆதாரணீய ஸ்ரீ சிவராம்ஜி ஜோக்லேகர், எச் வி. சேஷாத்ரி, ஸ்ரீ கே.எஸ்.சுதர்ஷன் ஜூ சர்சங்சாலக் ஸ்ரீ மோகன் ஜி பகவத் உள்ளிட்டோருடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.
நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற மருத்துவமனைகள் தொடங்க பலருக்கு உத்வேகமாக எஸ். பத்ரிநாத் இருந்துள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு துக்கத்தை தாங்கும் சக்தியையும், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.