திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்துள்ள பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.
இவருக்கும், உறவினர் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைத் தடபுடலாகச் செய்து வந்துள்ளனர்.
ஆனால், இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லை. இதை பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை.
இதனால், தனது திருமணத்தை எப்படி நிறுத்துவது என தோழிகளிடம் ஆலோசனை கேட்டுள்ளார். யூடியூப்பிலும் தேடியுள்ளார். இதில், யூடியூப்பில் கூறியுள்ளபடி, 1098 என்ற எண் உதவி மையத்திற்குச் சிறார் திருமணம் குறித்துத் தகவல் கொடுத்துள்ளார்.
அடுத்து நில நிமிடங்களில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் பரிமளா சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியதோடு, சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என அவரது பெற்றோர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
மேலும், சிறுமியை திருவண்ணாமலை அருகே உள்ள குழந்தைகள் நல காப்பத்தில் பத்திரமாக சேர்த்துள்ளார் அந்த அரசு பெண் அதிகாரி.
இதனால், சிறுமியின் பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.