கொங்கு மண்டலத்தில், மஞ்சள் மாநகரில் பிரபல நகைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த கடைக்குச் செல்லும் நடுத்தரக் குடும்பத்துச் பெண் ஒருவர், நகைக் கடையில் தனக்கு வேண்டியப்பட்ட நகைகளை வாங்கி ஆசை ஆசையாகப் பார்த்துள்ளார்.
தங்க நகை மீது அவரது கை பட்டு, அந்த நகை அப்படியே அதங்கி, வதங்கிவிட்டது. இதனால், ஆவேசமான நகைக்கடை ஊழியர்கள் அந்தப் பெண் வாடிக்கையாளரை வசைபாடுகின்றனர். மேலும், செய்கூலி கொடுக்க வேண்டும் என வற்புறுதியுள்ளனர்.
ஆனால், வாடிக்கையாளரோ, நீங்கள் தரமில்லாத நகைகளை வைத்துக் கொண்டு, எங்களிடம் பணம் கேட்பதா என பதிலுக்கு மல்லுகட்டுகிறார்.
நகைக்கடை ஊழியர் – வாடிக்கையாளர் இடையே நடக்கும் இந்த காரசார மோதல் வீடியோ தற்போது, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.