தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் நேற்று நடைபெற்ற மணிப்பூர் மற்றும் ஜம்மு & காஷ்மீர் அணிகளுக்கிடையேயானப் போட்டியில் 15-1 கோல் கணக்கில் மணிப்பூர் அணி வெற்றிப் பெற்றது.
13 வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைபெற்றுவருகிறது. நவம்பர் 18 தொடங்கிய இப்போட்டிகள் நவம்பர் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதில் நேற்று மணிப்பூர் மற்றும் ஜம்மு & காஷ்மீர் அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் மணிப்பூர் அணி 15 -1 என்ற கோல் கணக்கில் ஜம்மு & காஷ்மீரை வீழ்த்தியது.
மணிப்பூர் அணியில் தனஞ்சோய் மொய்ராங்தெம் மீடீ 3 மற்றும் 23 ஆகிய நிமிடங்களில் தனது 2 கோலை பதிவுசெய்தார். லைஷ்ராம் திபு சிங் 5 வது நிமிடத்திலும், நிங்கோம்பம் ஜென்ஜென் சிங் 10 வது நிமிடத்திலும், க்ஷேத்ரிமயும் வாங்கம்பா 12 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
பின்னர் கணேந்திரஜித் நீங்கோம்பம் 13 மற்றும் 25 ஆகிய நிமிடங்களில் தனது 2 கோலை பதிவுசெய்தார். இதன் மூலம் மணிப்பூர் அணி 5-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தது.
அப்போது ஜம்மு&காஷ்மீர் அணியின் சர்மா ரக்ஷித் 21 வது நிமிடத்தில் ஒரு கோலை பதிவு செய்தார். அதன் பிறகு ஜம்மு&காஷ்மீர் அணிக்கு கோல் ஏதும் கிடைக்கவில்லை.
ஆனால் மணிப்பூர் அணி மீண்டும் தனது ஆதிக்கத்தை செலுத்தியது. மணிப்பூர் அணியின் ஷுரன்ஷங்கம்பம் சுரேஷ் சிங் 30 வது நிமிடத்திலும், இன்னொசென்ட் முந்தா 35 வது நிமிடத்திலும், நீலகண்ட சர்மா 39 வது நிமிடத்திலும், சிங் தோச்சோம் கிரண்குமார் 44 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
பின்னர் இபுங்கோ கோன்ஜெங்பாம் சிங் 34 மற்றும் 55 வது நிமிடங்களில் தனது 2 கோலை அடித்தனர் அதேபோல் சிங் சிங்லென்சனா 39 மற்றும் 54 வது நிமிடத்தில் தனது கோலை பதிவுசெய்தார்.
இதனால் மணிப்பூர் அணி 15-1 என்ற கோல் கணக்கில் தனது அபார வெற்றியை பதிவு செய்தது.