சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா திரைப்படம் 38 மொழிகளில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக குடும்ப திரைப்படங்களை இயக்கி வருபவர் சிறுத்தை சிவா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சிறுத்தை’ படம் மூலமாக கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகம் ஆனவர்.
இந்நிலையில் தற்போது அவரது அண்ணன் சூர்யாவை கதாநாயகனாக கொண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘கங்குவா’ படத்தை இயக்கி வருகிறார்.
சிறுத்தை சிவா முழுக்க முழுக்க தனது ஜானரில் இருந்து விலகி இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா திரை வாழ்வில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருட் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட போர்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. இதற்காக தனது உடல் எடையை அதிகரித்து பிட்டான லுக்கிற்கு மாறினார்.
மேலும் இப்படத்தில் இஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகி வருகிறது தற்போது இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ‘கங்குவா திரைப்படம் உலகளவில் 38 மொழிகளில் வெளியாகும் மேலும் ஐமேக்ஸ் முறையிலும் இப்படத்தை உலகமெங்கும் வெளியிட முடிவு செய்துள்ளோம், நாங்கள் திட்டமிட்டபடி சரியான பாதையில் போனால் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பல்வேறு புதிய கதவுகள் திறக்கும்’ என்றார்.