கிரிக்கெட் பந்துவீச்சில் ஐசிசி ஒரு புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைவரும் மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் என்றே சொல்லலாம். இந்த கிரிக்கெட் பொறுத்தவரையில் ஒன்றல்ல இரண்டல்ல பல விதிமுறைகள் உள்ளது.
அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் முன்னணி வீரர் ஏஞ்சலோ மத்தியூஸ் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்ததை பார்த்திருப்போம்.
இது ஒரு வகை கிரிக்கெட்டின் விதிமுறை தான் ஆனால் ஜென்டில் மேன் விளையாட்டை விளையாடும் வீரர்கள் இந்த முறையை பயன்படுத்தாமல் இருந்தனர்.
இருப்பினும் இந்த உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் இந்த விதிமுறையை பயன்படுத்திருப்பார். அதேபோல் தற்போது ஐசிசி ஒரு புதிய விதிமுறையை கொண்டுவந்துள்ளது.
ஒரு ஓவர் முடிந்த பிறகு அடுத்த ஓவரின் முதல் பந்தை சரியாக 1 நிமிடத்தில் வீச வேண்டும். அப்படி 3 முறை வீசவில்லை என்றால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் கொடுக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
மேலும் இந்த விதிமுறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.