பருவ நிலை மாற்றத்தால் குழந்தைகள், முதியோருக்கு ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் எளிதில் பரவி வருகிறது. இந்த வைரஸ் எளிதில் பரவும் தன்மை உடையது.
காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியன இதன் அறிகுறியாகும்.
தொண்டையில் கரகரப்பு இருந்தால், கல் உப்பை வெந்நீரில் போட்டு, வாய் கொப்பளிக்க வேண்டும். இருமல், தும்பலின்போது கைக்குட்டையால் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்.
வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் இருந்து 1 மீட்டர் இடைவெளி விட்டு விலகி இருக்க வேண்டும்.
வெளியே சென்று வந்தால், கை, கால்களைச் சோப்பு போட்டு கழுவிய பிறகே, வீட்டுக்குள் செல்லவேண்டும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்களில் குணமடைந்து விடுவர் என்றும், அனைவரும் குடிநீரை கொதிக்க வைத்து பின்னர் ஆறவைத்து குடிக்க வேண்டும்.
வைட்டமின் சி. புரதச் சத்து மிகுந்த உணவு வகைகளை உட்கொண்டால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.