பள்ளிப் பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம்!
Sep 13, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளிப் பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 11:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளி பாடத் திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களைச் சோ்க்கவும், நாட்டின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின் உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குப் பள்ளிக் கல்வி தொடர்பாக உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையில், பள்ளி பாடத் திட்டங்களை என்சிஇஆா்டி புதுப்பித்து வருகிறது. இதற்கென, அந்தந்த பாட நிபுணா்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமூக அறிவியல் பாடத்துக்கான 7 உறுப்பினா்களைக் கொண்ட நிபுணா் குழு, பல்வேறு பரிந்துரைகளுடன் கூடிய தனது அறிக்கையை என்சிஇஆா்டி-யிடம் சமர்ப்பித்துள்ளது.

இது தொடர்பாக நிபுணா் குழுவின் தலைவர் ஐசக் கூறியதாவது: நாட்டின் இளைஞர்களிடையே சுயமரியாதை, தேசப்பற்று, தேசத்தின் பெருமைகள் குறித்த உணா்வை ஏற்படுத்துவது முக்கியமானது ஆகும்.

இதற்கு, சமூக அறிவியல் பாடத்திட்டத்தில், இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சோ்க்கப்பட்டு, கற்பிக்கப்பட வேண்டும். பாடப்புத்தகங்களில் இந்திய ஆயுர்வேத முறைகளைச் சேர்க்க வேண்டும்.

மேலும், பள்ளி பாடப் புத்தகங்களில் பண்டைய வரலாறு என்பதற்குப் பதிலாக ‘பாரம்பரிய வரலாறு’ என மாற்றவும், நாட்டின் பெயா் இந்தியா என்பதை ‘பாரதம்’ என பெயா் மாற்றம் செய்யவும், நாட்டை ஆண்ட அரசா்களின் வெற்றிகளை இடம்பெறச் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். நமது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட சமூக மதிப்பீடுகளுக்கு அரசியல் சாசனத்தின் முன்னுரை முக்கியத்துவம் அளிக்கிறது.

எனவே, அதனை மாணவா்கள் பாா்த்து கற்றுக் கொள்ளும் வகையில் வகுப்பறை சுவா்களில் எழுதப்பட வேண்டும் என்றும் உயா்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது என்றாா்.

இந்தப் பரிந்துரைகளை என்சிஇஆா்டி-யின் 19 உறுப்பினா்களைக் கொண்ட குழு பரிசீலனை செய்து, பாடத் திட்டத்தை இறுதி செய்வதற்கான அறிவிக்கையை வரும் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடும் என்று கூறினார்.

Tags: ramayanammahabharatham
Share
Tweet
SendShare
Previous Post

கால்பந்து தகுதிச்சுற்று : கத்தார் வெற்றி!

Next Post

ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் – தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies