மனிதர்கள் வாழும் பூமியை மட்டுமல்ல, கடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சட்டம்.
இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு எதிரே உள்ள கடலில் பை பையாக வாடிய மலர்களையும், குப்பைகளையும் அள்ளிக் கொண்டு வந்து கொட்டியுள்ளார். இந்த காட்சியை வீடியோ பதிவு செய்த சமூக ஆர்வலர்கள் சிலர் இதைச் சமூக வலைதலங்களில் வெளியிட்டு, சூற்றுச்சூழல் நிலை என்ன? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த தகவல் அறிந்த போலீசார், மற்றும் அதிகாரிகள் அங்குள்ள சிடிடிவிடி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து, குப்பை கொட்டிய நபரைத் தேடிப் பிடித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அது மட்டுமல்ல, அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மும்பை பெருநகர மாநகராட்சி விதித்துள்ளது.
காரணம் என்ன? பூமியின் பரப்பில் சுமார் 3-ல் 2 பகுதி உள்ள கடலில், மனிதர்கள் கொட்டியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை, 171 ட்ரில்லியன் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஒரு ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. இந்தப் பிளாஸ்டிக் குப்பைகள் மீனையும், பிற கடல்வாழ் உயிரினங்களையும் கொல்கின்றன. இதனாலேயே, சாட்டையை வேகமாக சுழட்டியுள்ளது அரசு நிர்வாகம்.