ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், காவல் துறையும் வெட்கி தலை குனிய வேண்டிய செயல் என்றும் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது, கடும் குற்றச்செயலும் கூட. அக்டோபர் 6ம் தேதியன்று அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கை நவம்பர் 2ம் தேதி பதியப்பட்டதோடு,…
— Narayanan Thirupathy (@narayanantbjp) November 22, 2023
ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் குற்றச்செயலும் கூட.
அக்டோபர் 6ம் தேதியன்று அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கை நவம்பர் 2 -ம் தேதி பதியப்பட்டதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டது வெட்கக்கேடு.
பின்னர் நவம்பர் 7 -ம் தேதி வாக்குமூலம் அளிக்க பேருந்தில் அழைத்து சென்று நீதிமன்றம் வரையில் அந்த சிறுமிக்கு கைவிலங்கிட்டு அழைத்து சென்றதுடன், திரும்பி வரும்போதும் பொது மக்கள் முன்னிலையில் கைதி போன்று அழைத்து சென்ற அவலம் தமிழக அரசும், காவல் துறையும் வெட்கி தலை குனிய வேண்டிய செயல்.
அதன் பின்னர் அந்த சிறுமியின் தாய் சிறுமியின் கைப்பட எழுதிய புகாரை விசாரிக்க நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளரால் அனுப்பப்பட்ட காவல் துறை அதிகாரியால் மிரட்டப்பட்டதாகவும், கைவிலங்கிட்டு அழைத்து சென்றதாக பொய் புகார் அளித்ததாகவும் மற்றொரு கடிதத்தை அச்சிறுமியிடம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை தீவிரமாக விசாரித்து தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது, ஒரு குழந்தையின் கண்ணியத்தை குலைக்கும் விதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.