திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கினார். இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை தொடர்ந்த சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
கடந்த சில மாதங்களாகச் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, வரும் டிசம்பர் மாதம் 4 -ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 11-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.