இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தற்போது இந்தியாவில் நடைபெற்று முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் நவம்பர் 23ஆம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனவரி 11ஆம் தேதி மொகாலியிலும், 14 ஆம் தேதி இந்தூரிலும், 17 ஆம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளன.
உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வளர்ந்து வரும் ஆசிய அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய ஒன்பது போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அசதியுள்ளது.
ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளுக்கு வெளியில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2018ஆம் ஆண்டு இரு அணிகளும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது.