சென்னையில், குட்கா மற்றும் கஞ்சா கடத்தலை தடுக்காத சப் – இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 15 பேர் காத்திப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக குட்கா, மாவா, புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு சோதனையில், 237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என்றும், இது தொடர்பாக, 248 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும், தொடர் சோதனை எதிரொலியாக 1,145.5 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் 28.5 கிலோ மாவா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், சென்னை பெருநகரக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னையில் கஞ்சா, குட்கா போதைப் பொருள் புழக்கம் மற்றும் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உடந்தையாக இருந்ததாகக் கூறி, 6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள் மற்றும் 14 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், புகாருக்கு உள்ளான 16 பேரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகரக் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.