கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ், கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதன் முதலாக கேரள கிரிக்கெட் சங்கம் தனது மகளிர் அணிக்கான விளம்பர தூதுவரை நியமித்து நிகழ்வு ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில், நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா டி20 போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு விற்பனையை கீர்த்தி சுரேஷ் வெகு விமரிசையாக தொடங்கி வைத்தார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட கேரளாவின் ஒரே தேசிய அணி வீரரான மின்னு மணியையும் கௌரவித்தார்.
உள்நாட்டுப் போட்டிகளில் அனைத்து வயதுப் பிரிவுகளிலும் முதல் தர மற்றும் சூப்பர் லீக் கட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றதற்காக அவர்களை வாழ்த்தினார்.
மேலும் 2017-18 ஆம் ஆண்டில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய டி20 சாம்பியன்ஷிப்பை வென்றது பற்றியும் கேட்டறிந்தார்.
மேலும் கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.