டைகர் 3 திரைப்படத்தில், திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து அராஜகம் செய்த ரசிகர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இயக்குனர் மணீஷ் சர்மா இயக்கத்தில், நடிகர் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள டைகர் 3 திரைப்படம் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மோகன் திரையரங்கில் தீபாவளி அன்று இரவு டைகர் 3 திரைப்படம் திரையிடப்பட்டது.
அப்போது அங்கு கூடிய சல்மான் கானின் ரசிகர்கள் குழு, திரையரங்கிற்குள் அவ்வளவு மக்கள் குடியிருந்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்து அராஜகம் செய்தனர்.
இந்த இதய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள் 3 பேரை நாசிக் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
ஜாவித் கான், பஜ்ரூம் ஷேக் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.